பெற்ற தந்தையே தனது மூன்று குழந்தைகளுக்கு எலி மருந்து கலந்த ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்ததில், ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவில் கொரோனாவால் பலரும் உயிரிலிருந்து வரும் சமயத்தில், குடும்ப தகராறு, சிறு சிறு காரணங்களால் கணவன் மனைவியை கொல்வது, மனைவி கணவனை கொல்வது, பெற்றோர்கள் சேர்ந்து குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொல்வது போன்ற பல சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. ஆனால் தற்போதுள்ள தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் தற்கொலை மற்றும் கொலை என்ற முடிவை எடுக்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிராவில் குடும்ப தகராறு காரணமாக ஒரு நபர் தனது மூன்று குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் எலி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழந்தது. மற்ற இரண்டு குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.