Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகள்…. இவர்களை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்…. அறிவிப்பு வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஆணையம்….!!

ஐரோப்பிய ஆணையம் 2  டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட வெளிநாட்டு பயணிகளை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என  தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் வெளிநாட்டு பயணிகளை தங்கள் நாட்டுக்குள் வர தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஐரோப்பிய ஆணையம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்ட பயணிகள் அனைவரையும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மட்டுமல்லாமல் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட அனைவரையும் அனுமதிக்க வேண்டுமென ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் பயணிகள் தனிமைப்படுத்துதல், சோதனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருக்க தடுப்பூசி சான்றிதழை கொண்டுவருவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கிகரிக்கப்பட்ட  2 டோஸ்ஸ் தடுப்பூசியினை போட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |