ஐரோப்பா கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை கூடுதலாக 300 மில்லியன் டோஸ்கள் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் பைசர் நிறுவனத்தின் ஆர்டரை இரட்டிப்பாக்கி அதிகமாக 300 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கவுள்ளது. இதனை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான, உர்சுலா வான் டென் லேயன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஐரோப்பியர்கள் தேவையான அளவு பாதுகாப்பான மற்றும் உபயோகமுள்ள கொரோனா தடுப்பூசிகளை வைத்திருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஐரோப்பா பைசர் தயாரித்த கொரனோ தடுப்பு மருந்தை தான் முதன்முதலாக பயன்படுத்த அங்கீகரித்துள்ளது. மேலும் முதலிலேயே 300 மில்லியன் டோஸ்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது ஐரோப்பா. இதையடுத்து தற்போது ஐரோப்பா தன் ஆர்டரை இரண்டு மடங்காக்கியுள்ளது. மேலும் புதிய ஆர்டருக்கான டோஸ்கள் 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இறக்குமதியாகும். மேலும் மீதம் இருக்கும் டோஸ்கள் வருடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது கால் வருடங்களில் பெறப்படும் என்று கூறியுள்ளனர்.