பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையையும் மீறி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் லட்சக்கணக்கான அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ரகசியமாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியுள்ளது என Sydney Morning Herald தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் ஐரோப்பிய ஆணையம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உற்பத்தி செய்யப்படும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது என்றும் அந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்று கொண்டது எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் 3,௦௦,௦௦௦ அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள் மார்ச் மாதம் எமிரேட்ஸ் பயணிகள் விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று SMH தகவல் வெளியிட்டுள்ளது.