மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ராமநாத சுவாமி கோவிலில் காளிதாஸ் என்னும் இளைஞர் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த தனது காதலி ஹானா பங்க்லோனாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் இந்து முறைப்படி ராமேஸ்வரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இன்று நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் திருமணம் முடிந்த பின் இந்த ஜோடிகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது இவர்களை கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்தபடி வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை செய்த போது இரண்டு வருடங்கள் இந்த பெண்ணை காதலித்ததாகவும் தற்போது பெற்றோர்கள் சம்மதத்துடன் இந்து முறைப்படி கோவில் வைத்து திருமணம் செய்து இருப்பதாகவும் இளைஞர் காளிதாஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Categories
ஐரோப்பா காதலியை கரம் பிடித்த திருமங்கல இளைஞர்… ராமேஸ்வரத்தில் டும் டும் டும்…!!!!!!
