ஐரோப்பிய நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
ஐரோப்பியாவிற்கான சுகாதார அமைப்பின் மண்டல இயக்குனரான ஹன்ஸ் கிளக், ஐரோப்பியாவில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் வாரந்தோறும் சுமார் 16 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஐரோப்பாவில் கொரோனா தீவிரம் அபாய நிலையை அடைந்திருக்கிறது. ஆனால் கொரோனாவால் வயதானவர்கள் உயிரிழப்பது குறைந்து வருகிறது. அதாவது வயது முதிர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் 80 வயதிற்கு அதிகமானவர்கள் உயிரிழப்பது 30% குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.