Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்… கிறிஸ்தவ தேவால காப்பகத்தில் தீ விபத்து… 15 குழந்தைகள் பலி.!

ஹைட்டி நாட்டில் காப்பகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 15 ஆதரவற்ற குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைட்டி நாட்டின் போர்ட் ஓ பிரின்ஸ் பகுதியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்டு கிறிஸ்தவ தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்திற்கு சொந்தமான காப்பகம் ஓன்றில் பல குழந்தைகள் தங்கியிருக்கின்றன.

Image result for Fifteen orphans died tragically in a fire at the Archive in Haiti.

இந்த நிலையில் நேற்று இரவு அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உடல் கருகியும், 13 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டும் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் வெளிச்சத்திற்காக வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி கவிழ்ந்து தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Categories

Tech |