Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்…! “உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்”…. ரஷ்ய அரசின் கட்டுப்பாடுகள்….!!!

ரஷ்ய அரசு விலைவாசி ஏற்றத்தால் பல்வேறு பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதாக உக்ரைன்  குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவும் உக்ரைன் மீது அணு குண்டுகளை தயாரிப்பதாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் உக்ரைன் துறைமுகங்களை முனைப்பு காட்டி வருவதால் அங்கு சிக்கித் தவிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மனித உடல்களாக மரியாபோல் நகரத் தெருக்களில் காணப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து போர் காரணமாக இரு நாடுகளிலும் உயிரிழப்புகளையும், மிகப்பெரிய பொருளாதார இழப்புகளையும் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முட்டை, ரொட்டி, இறைச்சி உள்ளிட்டவற்றிர்க்கு விலைவாசி ஏற்றத்தால் ரஷ்ய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.  இரு நாட்டு மக்களும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

Categories

Tech |