டெல்லியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுவனை அக்கம் பக்கத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் தனியாக அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இயற்கைக்கு மாறான முறையில் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் சிறுவனுடைய அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியை வைத்து துன்புறுத்தி உள்ளனர். ஆனால் அவர்களிடமிருந்து எப்படியோ மீண்டு வந்த சிறுவன் இதை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். ஆனால் சிறுவன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதால் உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு விசாரித்த போது தனக்கு நடந்த கொடூர சம்பவத்தை சிறுவன் கூறியுள்ளார். இது குறித்த விசாரணையில் காவல்துறையினர் குற்றவாளிகளான மூன்று சிறுவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.