பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மெகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படிக்கும் 60-க்கும் மேற்பட்ட மாணவிகளின் குளியல் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானதாக வதந்தி பரவியது. இதனால் கடந்த 17-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் பல்கலைக் கழகத்தில் படிக்கும் 1 மாணவி தன்னுடைய ஆபாச வீடியோவை இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியது தெரியவந்தது. அதன் பிறகு அந்த மாணவி, அவருடைய ஆண் நண்பர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், மற்றோரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை டுவிட்டரில் சிலர் விற்பனை செய்வதாக தற்போது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வீடியோக்கள் அதிகளவில் ட்விட்டரில் பகிரப்படுகிறது. இந்த வீடியோக்களை 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் தளமாக டுவிட்டர் மாறிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/SwatiJaiHind/status/1572142056293953540?s=20&t=jTRzyirkUnfr-snQGBATCg