Categories
உலக செய்திகள்

ஐயா.. ஜாலி… “இனி எப்ப நாளும் வெளிய சுத்தலாம்”…. அதிபரின் அதிரடி உத்தரவு… பிரபல நாட்டில் உச்சத்தைத் தொட்ட ஓமிக்ரான்…!!

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானின் பரவல் அங்கு மிகவேகமாக இருந்தாலும்கூட அந்நாட்டில் 2 வருடங்களுக்கு முன்பாக போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த மாதம் 24ஆம் தேதி ஓமிக்ரான் உரு மாற்றமடைந்துள்ளது. இந்தத் தொற்று உருமாற்றமடைந்த நாள் முதலிலிருந்தே அந்நாட்டில் ஓமிக்ரானின் வேகம் மிக அதிகமாக உள்ளது. அதிலும் முக்கியமாக ஒரே நாளில் 27,000 பேருக்கு ஓமிக்ரான் தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது தான் அந்நாட்டின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் அதிரடியாக 2 வருடங்களுக்கு முன்பாக கொரோனாவை கட்டுப்படுத்த அங்கு போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை ரத்து செய்துள்ளார். ஆகையினால் இனி பொதுமக்கள் எந்தவித நேர கட்டுப்பாடுமின்றி வீதியில் நடமாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |