Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஐயா… ஐயா வெளிய வர முடில…! உடனே புடிச்சு கொண்டு போங்க…. பயத்தில் உறைந்துள்ள ஊட்டிவாசிகள் …!!

ஊட்டி அருகிலுள்ள பகுதிகளில் புலி நடமாட்டம் இருப்பதால் புலியை கூண்டு வைத்து பிடிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி வனக்கோட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்குட்பட்ட கட நாடு, அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக புலி மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்கின்றனர்.  அந்த கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் புலி நடமாடுவதோடு காட்டெருமை, கடமான் ஆகிய வன விலங்குகளை வேட்டையாடி இழுத்துச் செல்கின்றது.  அதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் தோட்டங்களுக்கு  சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதைக்குறித்து வனத்துறை அலுவலர்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் அங்கு வந்து நேரில் பார்வையிட்டு புலி நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பின்பு கிராம மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்  கடநாடு கிராம மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூண்டு அமைத்து புலியைப் படிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.  புலி நடமாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகின்றது. அதன்பின் கிராம மக்கள்  நீலகிரி வனக்கோட்ட அலுவலர் சச்சினிடம் மனு  அளித்துள்ளனர்.

அந்த மனுவில் காவிலோரை, ஒடயரட்டி, ஆடலட்டி, கடநாடு, மாவுக்கல்,  இந்திரா நகர் ஆகிய பகுதிகளில்  கூலி வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் விவசாய தோட்டங்களுக்கு செல்வர்கள் புலியை  நேரில் பார்த்து அச்சமடைந்துள்ளனர்.  எனவே கண்காணிப்பு கேமரா பொருத்த ஆவணம் செய்வதோடு, கூண்டு அமைத்து புலியை பிடித்து அடர்ந்த காட்டிற்குள் கொண்டு விட வேண்டும் என்று  அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  இதுகுறித்து வனத்துறை கூறும்பொழுது 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு புலி நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம் என தெரிவித்தார்.

Categories

Tech |