மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் 16 ஆம் தேதியன்று மாலை வேளையில் திறக்கப்பட்டது. தற்போது படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளொன்றுக்கு 60,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சபரிமலை கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருந்து பெருவழி பாதையில் செல்வதற்கு தினசரி காலை 5.30 மணியில் இருந்து 10.30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.