ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையிலிருந்து தமிழகத்தின் முக்கியமான இடங்களுக்கு நேரடியாக பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரளா அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக தமிழகத்திலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையிலிருந்து வரும் 7ம் தேதி முதல் பழனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் உட்பட மூன்று இடங்களுக்கு நேரடியாக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 2-வது கட்டமாக சென்னை, மதுரை போன்ற இடங்களுக்கு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் மொத்தமாக சேர்த்து தமிழகத்தில் 12 இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பம்பை பஸ் நிலையத்தில் இருந்து 128 பஸ்கள் இயக்கப்பபட்டு நிலையில் டிசம்பர் 24-ஆம் தேதிக்கு பிறகு மேலும் 99 பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பம்பையில் இருந்து 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை சுமார் 4 லட்சத்து 52 ஆயிரம் பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்தி உள்ளதாகவும் கேரளா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.