நேற்று முன்தினம் மாலை முதல் இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் ஐபோன் 14 சீரிஸின் முன் பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்குவதற்கான அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளனர். முன் பதிவு செயல்முறை நேற்று முன்தினம் மாலை 5:30 மணி முதல் துவங்கியது. எனினும் இந்த முன் பதிவில் iPhone 14, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max போன்றவை மட்டுமே முன் பதிவுக்குக் கிடைக்கிறது.
iPhone 14 Plus மாடல் இச்செயல்முறையில் இல்லை. வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் அதிகாரப்பூர்வமான வலைத்தளம் மற்றும் அமேசான், பிளிப்கார்ட், க்ரோமா, விஜய்சேல்ஸ் மற்றும் ரிலயன்ஸ் டிஜிட்டல் ஆகியவற்றில் இருந்து ஐபோன்14 தொடரை முன் பதிவு செய்யலாம். இந்த அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு இந்த போனை வாங்க அதிக அபஷன்கள் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த விருப்பத்தை தேர்வுசெய்து கொள்ளலாம்.
ஐபோன் 14
ஐபோன் 14ன் விலை பற்றி பேசினால் வாடிக்கையாளர்கள் அதன் 128ஜிபி வகைக்கு ரூபாய்.79,900, 256ஜிபி மாறுபாட்டிற்கு ரூபாய்.89,900 மற்றும் 512 ஜிபி மாறுபாட்டிற்கு ரூபாய்.1,09,900 செலுத்த வேண்டும்.
ஐபோன் 14 ப்ரோ
ஐபோன் 14 ப்ரோ குறித்து பேசுகையில் 128ஜிபி வகைக்கு ரூபாய்.1,29,900, 256 ஜிபி மாறுபாட்டிற்கு ரூபாய்.1,39,900, 512 ஜிபி மாறுபாட்டிற்கு ரூபாய்.1,59,900 மற்றும் 1 டிபி வேரியண்ட்டுக்கு ரூபாய்.1,79,900 செலுத்த வேண்டும்.
ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்
இதுகுறித்து பேசுகையில், வாடிக்கையாளர்கள் அதன் 128ஜிபி வகைக்கு ரூபாய்.1,39,900, 256ஜிபி வகைக்கு ரூபாய்.1,49,900, 512ஜிபி மாறுபாட்டுக்கு ரூபாய்.1,69,900 மற்றும் 1ஜிபி மாறுபாட்டுக்கு ரூபாய்.1,89,900 செலுத்தவும்.
இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸின் விலையானது அமெரிக்க விலையில் இருந்து எவ்வளவு மாறுபட்டுள்ளது?
# அமெரிக்காவில் ஐபோன் 14 ப்ரோ- 999 டாலர்
# இந்தியாவில் ஐபோன் 14 ப்ரோ- 1,631.59 டாலர்
# அமெரிக்காவில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்- 1099 டாலர்
# இந்தியாவில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்- 1,756.67 டாலர்
# அமெரிக்காவில் ஐபோன் 14 – 799 டாலர்
# இந்தியாவில் ஐபோன் 14 -1,003.60 டாலர்