ஐபிஎல் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்வதன் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதன்மூலம் அவர்களுக்கு 3800 கோடி வருவாய் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த வருடம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நமது இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
2018 லிருந்து 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய ரூபாய் 16,347.5 கோடிக்கு பிசிசியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. போட்டியை ஒளிபரவுவதன் மூலம் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 3,600 கோடி முதல் 3,800 கோடி வரை வருவாய் கிடைக்கும். அந்த நிறுவனம் போட்டிகளின் இடையில் வழங்கப்படும் விளம்பரங்களுக்கு 10 வினாடிக்கு விளம்பரம் கட்டணமாக 13 லட்சம் முதல் ரூபாய் 14 லட்சம் வரை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.