நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் இந்த பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜெய்தேவ் உனட்கட் ஐபிஎல் சம்பளத்தில் 10 சதவிகிதத்தை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வாங்க நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார்.