Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்….. விராட்கோலி சாதனையை முறியடித்த லோகேஷ்ராகுல்….!!!!

விராட் கோலி சாதனையை லோகேஷ் ராகுல் முறியடித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் 30 ரன்களை எடுத்தார். இதன் மூலம் சர்வதேச ஐபிஎல் போட்டியில் 20 ஓவரில் 6 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார். அவர் 179 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியுள்ளார். இதற்கு முன்பு விராட்கோலி 184 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்னை கடந்து சாதனை படைத்தார். தற்போது லோகேஷ் ராகுல் அவரது சாதனையை முறியடித்துள்ளார்.

ஒட்டு மொத்தமாக 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 6000 ரன்களை கடந்தவர் பட்டியலில் லோகேஷ் ராகுல் மூன்றாவது வீரர் ஆவா.ர் முதலிடத்தில் வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் (162 இன்னிங்ஸ்), 2-வது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் (165 இன்னிங்ஸ்) உள்ளனர்.  20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் பட்டியலில் முதலிடத்தில் விராட்கோலி 3296 ரன்னுடனும், 2-வது இடத்தில் ரோகித்சர்மா 3313 ரன்னுடனும், 3-வது லோகேஷ் ராகுல் 1831 ரன்னுடனும் உள்ளனர்.

Categories

Tech |