ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மும்பை கோகுல்தம் பகுதியை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் கரண் திவாரி என்பவர் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் போன்றே பந்துவீசும் திறனை பெற்றவர். அவரது குடியிருப்பு பகுதியில் இருப்பவர்கள் ஜூனியர் டெல் ஸ்டெய்ன் என்று அழைப்பது வழக்கம். இந்நிலையில் சென்ற வருடம் ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வில் பங்கேற்க அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இதனால் சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கரண் நேற்றிரவு தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.