மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சையது முஷ்டாக் அலி 20 ஓவர் கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணியை ருதுராஜ் வழிநடத்துவார் என அம்மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் எலீட் A பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிகள் சந்திக்க உள்ளன. இந்த நிலையில் மாநில அணிக்கு கேப்டனாக செயல்படும் பொறுப்பு ருதுராஜிற்கு கிடைத்துள்ளது.