அமெரிக்காவின் கோஸ்டாரிக்கா நாட்டில் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பெரும் தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவின் கோஸ்டாரிக்கா நாட்டில் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே கோஸ்டாரிக்காவில் தான் முதன்முறையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாட்டில் ஏற்கனவே 7000 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் இங்கு 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 54 சதவீதத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.