அமெரிக்காவில் ஐநா பொது சபை கூட்டத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதியான ஜோபைடன் நேற்று முன்தினம் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் இந்தியாவுடன் ஜெர்மனி ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது பற்றி அவர் பேசும்போது, இன்றைய உலகின் தேவைகளுக்கு சிறப்பாக பதில் அளிக்கின்ற விதமாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்னும் கூடுதல் உறுப்பினர்களை உள்ளடக்கியதற்காக அமைவதற்காக நேரம் வந்துவிட்டது என நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் பதில் அளித்து பேசும் போது ஜெர்மனி, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வரலாற்று ரீதியாகவும் தொடர்ந்து ஆதரித்து வருகின்றோம். அதே சமயம் இதற்காக நிறைய பணிகள் செய்து முடிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.