Categories
தேசிய செய்திகள்

ஐநா அமைப்புகள் கோவக்சின் கொள்முதலுக்குWHO தடை… 6 முதல் 8 மாதங்கள் ஆகலாம்… பயோடெக் நிறுவனம் அறிவிப்பு…!!!!!

கொரோனா தடுப்பு மருந்தாக கோவச்சினில்  உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஆறு மாதங்கள் தேவைப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐநா அமைப்புகளால் கோவக்சின்  கொள்முதல் செய்யப்படுவதை உலக சுகாதார அமைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் கோவக்சின்  பயன் உள்ளது, எனவும் பாதுகாப்பானது எனவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜிஎம்பி எனப்படும் குறிப்பிட்ட நல்ல உற்பத்தி நடைமுறைகளை மேம்படுத்த 6 முதல் 8 மாதங்கள் ஆகலாம் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய உபகரணங்களை வழங்குவதற்கு 15 முதல் 18 மாதங்கள் ஆகும் என்பதால் மருந்து தயாரிப்பில் தாமதம் ஏற்படும் என தெரியப்படுகிறது.

Categories

Tech |