ஹைதராபாத்திற்கு வேறு பெயரை சூட்ட முடியாது என்று பாஜகவுக்கு வேறு பெயர் சூட்டப்படும் என்றும் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது ஹைதராபாத் இருக்கு வேறு பெயர் மாற்றம் செய்யப்படுவதாக கூறி விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்தார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பைசாபாத்தை அயோத்தி என்றும், அலகாபாத் பிரயாக்ராஜ் என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தோம். அப்படி இருக்கையில் ஹைதராபாத்தின் பாகியநகர் எனப் ஏன் பெயர் மாற்றம் செய்ய முடியாது என யோகி ஆதித்யநாத் கூறினார்.
அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யோகி ஆதித்யநாதிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஹைதராபாத்திற்கு வேறு பெயர் சூட்ட விரும்புகிறார்கள் என்றால், பாஜகவுக்கு தான் வேறு பெயர் சூட்ட வேண்டும் என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார். உ.பியின் முதல்வர் இங்குவந்து ஹைதராபாத் பெயரை மாற்றுவேன் என்று கூறியிருக்கிறார் இதற்காக நீங்கள் ஒப்பந்தம் ஏதாவது போட்டு இருக்கிறீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.