கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பிரச்சனை காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன.அப்போது ஐடி மற்றும் டிஜிட்டல் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது கட்டாயமாகப்பட்டது.அதிலும் குறிப்பாக முழுக்க முழுக்க வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தனர். சொல்லப்போனால் இனி அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டனர்.
பொதுவாக தகவல் தொழில்நுட்பம் போன்ற டிஜிட்டல் சார்ந்த தொழில்களில் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வசதிகள் உள்ளது. ஆபீஸ் வாடகை,கரண்ட் பில் மற்றும் நெட்வொர்க் போன்ற பல்வேறு விஷயங்களுக்காக அதிக செலவு செய்ய வேண்டி இருப்பதால் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆபீஸ் இல்லாமல் தங்களது ஊழியர்களிடம் வீட்டிலிருந்து வேலை வாங்கி வருகின்றன.
வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும் முடிகின்றது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.அதனால் ஊழியர்கள் மீண்டும் வீட்டிலிருந்து வேலை பார்க்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.
ஏற்கனவே டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டிலிருந்து தான் வேலை வாங்கிக் கொண்டிருக்கின்றன. பேடிஎம் நிறுவனமும் அண்மையில் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க உத்தரவிட்டது. இதனைப் போலவே பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை முழுமையாக வீட்டில் இருந்து வேலை பார்க்க உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் இவ்வாறு தொடரும் பட்சத்தில் அனைத்து ஐடி நிறுவன ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை பார்க்க வேண்டிய நிலை உருவாகக் கூடும்.
இது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் அதனால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிறுவனங்கள் அஞ்சுகின்றன. இருந்தாலும் ஊழியர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்ட இந்த முடிவை நிறுவனங்கள் அனைத்தும் மேற்கொண்டு தான் ஆக வேண்டும்.எனவே விரைவில் அனைத்து ஐடி நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கும் அறிவிப்பை வெளியிட்ட தான் ஆக வேண்டும்.