கிழக்கு ரயில்வே துறையின் கீழ் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பல்வேறு துறைகளில் 2020ம் ஆண்டுக்கான அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது.
காலியிடங்கள் : வெல்டர், வயர்மேன், ஸ்டீல் மெட்டல் வொர்க்கர், லைன்மேன், பெயின்டர், கார்ப்பென்டர், ஃபிட்டர் என பல்வேறு தொழிற்பிரிவுகளில் அரசு விதிகளின்படி மொத்தம் 2792 பேருக்கு உதவித்தொகையுடன் கூடிய அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது.
கல்வித் தகுதி : பல்வேறு தொழிற்பிரிவுகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதால் பணிகளுக்கு ஏற்றாற்போல் கல்வித்தகுதி மாறுபடுகிறது.
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் 50% மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ந்தெடுக்கப்போகும் துறைகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். Welder (Gas & Electric) / Steel Metal Worker / Lineman / Wire man / Carpenter / Painter போன்ற பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பது போதுமானது.
வயதுவரம்பு : விண்ணப்பதாரர்கள் 15 முதல் 24 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும். எஸ்.சி /எஸ்.டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
உதவித்தொகை: ரயில்வே விதிமுறைப்படி பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐயில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.rrcer.com என்ற இணையதளம் சென்று விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி / எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள் 13.3.2020.
மேலும் முழு விவரங்களுக்கு www.rrcer.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.