சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்த தமிழக மருத்துவ துறை திமுக ஆட்சியில் ஐசியுவில் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். புதிய கொரோனாவை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.