ஐசிசி வெளியிட்ட டி20 போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை .
டி20 போட்டிக்கான பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 841 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார் .இதையடுத்து பாகிஸ்தான் அணி கேப்டனான பாபர் அசாம் 819 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்திலும் ,ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 733 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்திலும் உள்ளனர். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 717 புள்ளிகளைப் பெற்று4-வது இடத்தில் உள்ளார். அடுத்ததாக இந்தியஅணி வீரர் கே.எல்.ராகுல் 699 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.
🔹 Gains for Quinton de Kock 👏
🔹 Mustafizur Rahman rises up 🙌This week's @MRFWorldwide ICC Men's T20I Player Rankings has some big movements 📈
Details 👉 https://t.co/rxcheDGCjM pic.twitter.com/83AUWRMqwf
— ICC (@ICC) September 15, 2021
இதையடுத்து பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளரான ஷம்சி 775 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார் .இதற்கு அடுத்ததாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வணிந்து ஹசரங்கா 747 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் 719 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்திலும் உள்ளனர். ஆனால் முதல் 10 இடங்களில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் இடம்பெறவில்லை. இதில் இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் 12 – வது இடத்திலும், வாஷிங்டன் சுந்தர் 18வது இடத்திலும் உள்ளனர்.