Categories
மாநில செய்திகள்

ஐஐடி ஊழியர்கள் கவனத்திற்கு….. புதிதாக தொடங்கப்பட்ட இ-மொபிலிட்டி படிப்பு…. வெளியான தகவல்கள்….!!!!

ஐஐடி ஊழியர்களுக்கு புதிதாக இணைய வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஐஐடி  தொழில்துறையில் பணிபுரிபவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் இ- மொபிலிட்டி என்ற இடைவெளி சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணைய வழி படிப்புக்கான பாடத்திட்டத்தில் மொத்தம் 9 தொகுதிகள் உள்ளது. அதில் 4  தொகுதிகள் தொழில்துறையில் ஏற்கனவே பணிபுரிபவர்கள் எவ்வாறு தொழில்துறை நிபுணர்களின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் தொழில்நுட்பத்தில் உள்ள ட்ரெண்டுகள்  தொழில்துறை தேவைகள் உள்ளிட்ட  அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்படும். மேலும் இந்த இணைய வழி பாடத்திட்டத்தில் பவர் எலெக்ட்ரானிக்ஸ்  பவர் ட்ரெய்ன்ஸ்  உள்ளிட்ட தொழில்துறை அடிப்படைகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இது குறித்து சென்னை ஐஐடி  இயக்குனர் வி. காமகோடி கூறியதாவது.

தற்போது ஆட்டோமொபைல் துறையில் குறிப்பிட்ட தொகுதிகள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாறி வருகிறது. இதனால் தொழில்துறையில் ஏற்கனவே பணிபுரிந்து வரும் ஊழியர்களின் திறனை மேம்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது தொழில்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நிபுணர்களின் தொழில்நுட்ப அறிவு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இ- மொபிலிட்டி என்ற இணைய வழி படிப்பை தொடங்கியுள்ளோம். இதற்கான வகுப்புகள் வருகின்ற அக்டோபர் மாதம் 2-ஆம்  தேதி முதல் தொடங்கப்படுகிறது. எனவே இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அவர்  கூறியுள்ளார்.

Categories

Tech |