Categories
கால் பந்து விளையாட்டு

“ஐஎஸ்எல் கால்பந்து போட்டி” இப்படி தப்பா விளையாடக்கூடாது… கோவா வீரருக்கு தடை…!!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா வீரருக்கு ஷோ கேஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு ஒரு போட்டியில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

கொரோனா தொற்று குறைந்து வருவதனால் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கடந்த 20ஆம் தேதி கோவாவில் வைத்து நடைபெறத் தொடங்கியது. 11 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மும்பை சிட்டி அணியும் எப்.சி கோவா அணியும் சமீபத்தில் மோதிக்கொண்டன.

அப்போது கோவா அணியின் வீரரான ரிடீம் ட்லாங் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது.40வது நிமிடத்தில் ரிடீம் ட்லாங் மும்பை அணியின் வீரரை தாக்கும் விதமாக செயல்பட்டுள்ளார். இதனால் இந்திய கால்பந்து கூட்டமைப்பு ரிடீம் ட்லாங்கிற்கு ஷோ கேஸ் நோட்டீஸ் வழங்கியதோடு ஒரு போட்டியில் பங்கேற்கவும் தடை விதித்துள்ளது.

Categories

Tech |