Categories
சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான்-நெப்போலியன் சந்திப்பு…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக உருவாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். அதன்பின் ரஹ்மான் அமெரிக்காவுக்கு இசை சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார். அத்துடன் அமெரிக்காவிலிருந்து பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்களின் பின்னணி இசை பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

இதற்கான புகைப்படங்களை அண்மையில் அவரது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து பேசியுள்ளார். இந்த புகைப்படத்தை தன் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்ட நெப்போலியன், “ஆஸ்கார் நாயகன் திரு ஏ.ஆர். ரஹ்மான் அவர்களை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் நாஷ்வில்லில் கடந்த ஆகஸ்ட் 9 ம் தேதி சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர் மிகவும் எளிமையாக மற்றும் இனிமையாக பேசினார். பல வருடங்களுக்கு பிறகு அவரை சந்தித்தேன். அப்போதும் அதே அன்பான உபசரிப்பு” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |