தமிழக முதல்வர் ஏழை,எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் கட்டித்தர முன்வருமாறு கட்டுமான துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மாமல்லபுரத்தில் நடைபெறுகின்ற இந்திய கட்டுமான சங்கத்தின் 3 நாள் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது வெள்ளியினால் ஆன செங்கோல் ஆனது முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வில் முதல்வர் பேசியுள்ளதாவது, மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள் கட்டுமானத் துறையினர் என்றும் நாட்டை கட்டமைப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் கட்டுமானத்துறை கைகோர்த்து செயல்படுகிறது. மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை சென்னை கட்டுமான சங்கம் வழங்குவதாக நான் அறிந்துள்ளேன்.
இந்நிலையில் கட்டுமான சங்கத்திற்கு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார் எனவும் சிமெண்ட் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை கட்டுமான சங்க விழா மேடையிலேயே கருணாநிதி வெளியிட்டார் எனவும் கூறியுள்ளார். மேலும் தான் முதல்வராக பதவியேற்ற பின்பு, பல்வேறு சலுகைகளை கட்டுமான துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் கட்டித்தர, கட்டுமானத் துறையினர் முன்வர வேண்டும் எனவும் அரசின் கட்டிடங்களை தரமான முறையில் கட்டி தரவேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.