Categories
மாநில செய்திகள்

ஏழை, எளிய மக்களுக்கு குட் நியூஸ்…. மீண்டும் செயல்படும் அம்மா உணவகம்…. மேயர் தகவல்….!!!!

அனைத்து அம்மா உணவகங்களிலும் ஆய்வு செய்யப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா ஏழை, எளிய மக்களின் பசி தீர்வதற்காக அம்மா உணவகத்தை தொடங்கினார். இது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ஆட்சியில் திமுக இருப்பதால் அதற்கு சரியான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இது குறித்து சென்னை மேயர் பிரியா கூறியதாவது.

அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக மாநகராட்சி கணக்கு குழு தலைவர் கூறியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து உணவகம் செயல்பாட்டில் தான் இருக்கும். மேலும் பயன்பாட்டில் இல்லாத அனைத்து அம்மா உணவகங்களும் ஆய்வு செய்யப்பட்டு விரைவில் திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |