இலங்கையில் அதிபரை பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அதில் நிலையற்ற அரசியல் தன்மை மற்றும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன். அவர்களின் துயரில் நான் என்னையும் இணைத்துக் கொள்கிறேன். மேலும் ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்க வேண்டாம் என்று அரசியல் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறாக போப்பாண்டவர் பிரான்சிஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.