55 லட்ச ரூபாய் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சிங்கம்பேட்டை கேட் மற்றும் நெருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த 2 பேர் 5 லட்சம், 10 லட்சம் என பல்வேறு ஏல சீட்டுகள் நடத்தியுள்ளனர். இவர்களை நம்பி பவானி ராணா நகர் பகுதியில் வசிக்கும் வேணி உட்பட 4 பேர் மாதம் தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனர். இதுவரை வேணி 11 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் ஏல சீட்டு முடிந்ததும் பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட வேணி உட்பட நான்கு பேரும் ஏலச்சீட்டு நடத்திய 2 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், 2 பேரும் பலரிடமிருந்து 55 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது உறுதியானது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.