Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே 2 திருமணம்….. 3-வதாக பெண்ணுடன் பழகிய போலீஸ்காரர்…. சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!

2 திருமணங்கள் செய்த பிறகு 3-வதாக ஒரு பெண்ணுடன் பழகிய போலீஸ்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்துராஜா பாளையம் பகுதியில் போலீஸ்காரரான நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மனைவிக்கு தெரியாமல் நவீன் ஒரு பெண்ணை காதலித்து 2-வதாக திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு நவீன் அந்த பெண்ணை முசிறி காவலர் குடியிருப்பில் தங்க வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சிறுகனூர் காவல் நிலையத்திற்கு நவீன் இரண்டாம் நிலை போலீஸ்காரராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அப்போது அவருக்கு 3-வதாக ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த 2-வது மனைவி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நடத்திய விசாரணையில் நவீன் ஏற்கனவே 2 திருமணம் செய்திருப்பதும், 3-வதாக அவருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதும் உறுதியானது. இதனையடுத்து நவீனை போலீஸ் சூப்பிரண்டு பணிநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |