தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் ஏற்கனவே பணியாற்றும் அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முறையாக பயிற்சி பெற்ற 58 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அர்ச்சகர்களாக உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.