ஆந்திர மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 64 பயணிகளுடன் தோகாவில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா-க்கு புறப்பட்டது. அந்த விமானம் இன்று மாலை ஆந்திர மாநிலம் விஜயவாடா விமான நிலையத்தை நெருங்கியபோது தரை இறங்குவதற்கான சிக்னல் கிடைத்ததும் ஓடுபாதையில் இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மின் கம்பம் ஒன்றில் இறக்கை மோதியது.
அதனால் இறக்கை பாதிப்படைந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. அதனை சுதாகரித்துக் கொண்ட பைலட் விமானத்தை உடனடியாக நிறுத்தினார். அதன் பிறகு பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் மிக பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.