Categories
தேசிய செய்திகள்

ஏர்போர்ட்டிற்கு துப்பாக்கி குண்டு எடுத்து சென்ற ஆசிரியருக்கு…. இப்படி ஒரு தண்டனையா?…. அதிரடி உத்தரவு….!!!!

டெல்லி சர்வதேச இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு ஆசிரியர் ஒருவர் தனது துப்பாக்கி குண்டு ஒன்றை கொண்டு சென்றுள்ளார். இதை கண்டறிந்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தன் மீதுள்ள வழக்குப்பதிவை நீக்ககோரி ஆசிரியர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அவற்றில், உத்தரகாண்டின் சமோலி நகரில் பள்ளியில் பயின்று கொண்டிருந்த நேரத்தில், கடந்த 2008-09 ஆம் ஆண்டில் சாலையில் நடந்து சென்றபோது கீழே கிடந்த துப்பாக்கி குண்டை எடுத்தேன்.

இதையடுத்து அந்த குண்டு என்னிடமே இருந்தது. இதனால் அதை தவறுதலாக உள் நோக்கம் எதுவுமின்றி விமான நிலையத்திற்கு கொண்டு சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங் வழங்கியுள்ள தீர்ப்பில், ஆசிரியர் மீது பதிவான வழக்குப்பதிவு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் சிறிய விவகாரத்திற்காக காவல்துறையினரின் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் அதற்கு ஈடாக கண்டிப்பாக சமூகபணி ஒன்றை ஆற்ற வேண்டும்.

அதன்படி ஒவ்வொரு பணி நாளின் போதும் கூடுதலாக ஆசிரியர் 2 மணிநேரம் வகுப்புகளை எடுக்க வேண்டும். மேலும் படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கு, அவர் பணி செய்யும் பள்ளி வளாகத்திலேயே கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை உறுதிசெய்யும்படி கல்வி இயக்குனரகத்திற்கும் உத்தரவின் நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கென கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய வகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்யும்படி பள்ளி முதல்வரிடமும் கேட்டுகொள்ளப்படுகிறது என கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

Categories

Tech |