நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பலரும் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை செய்து முடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் பிராட்பேண்ட் இணைப்பு சேவைகளை வழங்கி வரும் பாரதியார் டெல் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் பைபர் இன் அதிவேக வைபை ரவுட்டர்களின் ஒரே கனெக்சனில் சுமார் 60 டிவைஸ்களை இணைக்க முடியும் என அறிவித்துள்ளது.
Work from Home, ஆன்லைன் வகுப்புகள் மற்றும் முழு ஊரடங்கு நேரத்தை பொழுது போக்குடன் கழிப்பதற்கு ஒரே வீடுகளில் ஒரே நேரத்தில் 10 முதல் 12 டிவைஸ்களை பயன்படுத்தும் சூழல் நிலவி வருகிறது. இதில் ஸ்மார்ட்போன், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்ட்ரீமிங் சாதனங்கள், ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் உபகரணங்கள் மற்றும் செக்யூரிட்டி சிஸ்டம் உள்ளிட்டவை அடங்கும். ஒரே நேரத்தில் 60 டிவைஸ்கள் வரை பயன்படுத்தக்கூடிய இந்த ஸ்கீமிற்க்கு மாதாந்திர கட்டணம் ரூ.3,999 என்று ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. அதிவேகத்தில் அதிக இணைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க தேவையான வைஃபை ரவுட்டர்களை, பிரபல வைஃபை ரவுட்டர் உற்பத்தியாளரிடம் இருந்து ஏர்டெல் நிறுவனம் வாங்கியுள்ளது.