Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு… வெளியான அதிரடி அறிவிப்பு… போடு செம…!!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு டேட்டா பேக்குகளை அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு சிம் கார்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி ஏர்டெல் நிறுவனம் ரூ.78 மற்றும் ரூ 248 என்ற விலையில் இரண்டு டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 78 ரூபாய்க்கு 5 ஜிபி டேட்டா, 248 ரூபாய்க்கு 25 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும். இந்த டேட்டாகளுக்கு வேலிடிட்டி பிரைமரி பிளான் முடியும் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |