Airtel நிறுவனம் ஏர்டெல்பிளாக் என்ற அம்சத்தின் கீழ் இலவச ஓடிடி சந்தாவுடன் போஸ்ட் பெய்டு, பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் அணுகளுக்கான நன்மைகளை அளிக்கிறது. முன்பே ப்ரீபெய்ட் (அ) போஸ்ட்பெய்டு இணைப்பில் பைபர், டிடிஹெச் ஆகிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு Airtel பிளாக் வழங்குகிறது. Airtel பிளாக் அதன் வாடிக்கையாளர் உடன் நல்லுறவை கொண்டிருக்கிறது. அத்துடன் பராமரிப்பு, தவறுகள் மற்றும் சிக்கல்களைத் தீர்க்க முன்னுரிமை வழங்குகிறது. Airtel பிளாக், ஏர்டெல் வாடிக்கையாளர்களை டிடிஹெச், லேண்ட்லைன், ஃபைபர் மற்றும் மொபைல் இணைப்பு போன்றவற்றை ஒரே பில் சுழற்சியில் இணைக்க அனுமதிக்கிறது. தற்போது பல நன்மைகள் கிடைக்கப்பெறும் அடிப்படையில் ஏர்டெல் தரக்கூடிய திட்டங்கள் தொடர்பாக பார்ப்போம்.
Airtel பிளாக் திட்டம் ரூபாய்.699
இது Airtel பிளாக் வழங்கும் ஆரம்பநிலை திட்டம் ஆகும். இத்திட்டம் லேண்ட்லைன், பைபர் வழியே 40 எம்பிபிஎஸ் வரை அன்லிமிடெட் டேட்டா மற்றும் டிடிஹெச் இணைப்பில் ரூபாய்.300 மதிப்புள்ள டிவி சேனல்களுக்கான அணுகலை வழங்குகிறது. அத்துடன் இத்திட்டத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்ஸ் மற்றும் மேலும் 12 ஓடிடிகளுக்குரிய இலவச சந்தாவையும் அளிக்கிறது. எனினும் இத்திட்டம் போஸ்ட் பெய்டு இணைப்பை வழங்காது.
Airtel பிளாக் திட்டம் ரூபாய்.899
இத்திட்டம் 105gp டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புடன் 2 போஸ்ட்பெய்ட் இணைப்புகளை அளிக்கிறது. அமேசான் ப்ரைம் வீடியோக்கள், டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் 12 ஓடிடிகளுக்கான இலவச சந்தாவையும், டிடிஹெச் இணைப்பில் ரூபாய்.350 மதிப்புள்ள டி.வி சேனல்களுக்கான அணுகலை வழங்குகிறது
Airtel பிளாக் திட்டம் ரூபாய்.1098
இத்திட்டம் பைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்புடன் 100 எம்பிபிஎஸ் வேகத்துடன் 75gp டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புடன் போஸ்ட் பெய்ட் திட்டத்துடன் வருகிறது. அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாருக்குரிய இலவசசந்தாவையும் இது அளிக்கிறது.
Airtel பிளாக் திட்டம் ரூபாய்.1099
இது லேண்ட்லைன் வாயிலாக அன்லிமிடெட் அழைப்பை வழங்குகிறது. பைபரில் 200 எம்பிபிஎஸ் வரை அன்லிமிடெட் டேட்டாவை வழங்குவதோடு, அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் 13 ஆப்ஸ் உள்ளிட்ட ரூபாய்.350 மதிப்புள்ள OTT சேனல்களுக்கான அணுகலையும் வழங்குகிறது.
Airtel பிளாக் திட்டம் ரூபாய்.1599
இத்திட்டம் ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்புடன் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 300 எம்பிபிஎஸ் வேக டேட்டா வரை வருகிறது. இவற்றில் ரூபாய்.350 மதிப்புள்ள டிவி சேனல்களுடன் டிடிஹெச் இணைப்பும் இருக்கிறது. அத்துடன் இது நெட் ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி +ஹாட்ஸ்டார் போன்ற பல்வேறு ஓடிடி நன்மைகளையும் அளிக்கிறது.
Airtel பிளாக் திட்டம் ரூபாய்.1799
இத்திட்டத்தில் பைபர், லேண்ட்லைன், 200 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டம் 190gp டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புடன் 4 போஸ்ட்பெய்ட் இணைப்புகளையும் அளிக்கிறது. அத்துடன் அமேசான் பிரைம் வீடியோக்கள், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகிய பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
Airtel பிளாக் திட்டம் ரூபாய்.2299
இது ஏர்டெல் பிளாக் வழங்கக்கூடிய விலை உயர்ந்த திட்டம் ஆகும். அத்துடன் இது ஃபைபர், லேண்ட்லைன் இணைப்புடன் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 300 எம்பிபிஎஸ் வரை டேட்டாவை வழங்குகிறது. மேலும் 240gp டேட்டாவுடன் 4 போஸ்ட் பெய்ட் இணைப்புகள், அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ரூ.350 மதிப்புள்ள டி.வி சேனல்களுடன் டிடிஹெச் இணைப்பையும் வழங்குகிறது. அத்துடன் நெட்ப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகிய ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது.