இந்தியாவின் அதிவேக இணையதள சேவையான 5ஜி சேவை தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. 5ஜி சேவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்கி நடைபெற்றுள்ளது. அதில் ரிலையன்ஸ், ஜியோ, ஏர்டெல் குழுமத்தில் அதாணி டேட்டா போன்ற நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் அந்த நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை வழங்க தயாராக உள்ளது. இந்த நிலையில் முன்னணி தொலைதொடர்பு நநிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அருமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதாவது 4ஜி விலையில் 5ஜி சேவை வழங்க இருப்பதாக கூறியுள்ளது. மேலும் இது பற்றி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வெளியிட்ட அறிவிப்பின் படி தற்போது உள்ள சூழ்நிலையில் 8 முதல் 9 சதவீத 5ஜி ஸ்மார்ட் ஃபோன்களை மட்டுமே வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் 5ஜி சேவை கட்டணம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டால் பெரிய லாபம் இருக்காது. எனவே தற்போதைக்கு 4g சேவை கட்டணத்தில் 5ஜி சேவை வழங்குகின்றோம் என அவர் கூறியுள்ளார். மேலும் இன்னும் ஒரு சில மாதங்களில் பயிற்சி ஸ்மார்ட்போன்கள் அதிகமாக வாடிக்கையாளர்களின் கைக்கு வந்துவிடும் எனவும் அதன் பின் 5ஜி தேவைக்கான கட்டணத்தை நிர்ணயிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.