Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏரியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் இருக்கும் ஏரியில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |