Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஏரியின் நடுவில் கிடந்த உண்டியல்…. அதிர்ச்சியடைந்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோவில் உண்டியலை ஏரியில் போட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குவாகம் கிராமத்தில் கண்ணங்குழி ஏரி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அந்த ஏரியில் நீர்மட்டம் அதிகளவு இருந்துள்ளது.. ஆனால் தற்போது மழை பெய்யாததால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் ஏரியின் நடுவில் ஒரு உண்டியல் தெரிவதை பார்த்து வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த உண்டியலில் வீரனார் கோவில் உண்டியல் என எழுதப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மீட்கப்பட்ட உண்டியலை வாலிபர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் எந்த கோவிலில் இருந்து உண்டியல் திருடப்பட்டது எனவும், அதனை ஏரியில் போட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |