Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஏரலில் மினி லாரி ஏற்றி எஸ்.ஐ. கொலை – பரபரப்பு தகவல் …!!

ஏரல் பகுதியில் மினி லாரியை ஏற்றி எஸ்.ஐ கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே இருக்கக்கூடிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொற்க்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஏரல் பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் பாலு என்பவர் அப்போது மதுபோதையில்  டாட்டா ஏசி வாகனத்தை ஓட்டி வந்த முருகவேல் என்பவரை பிடித்து விசாரித்தார்.

முருகவேல் அருகில் இருக்கக்கூடிய கடையில் மது போதையில் பிரச்சினை செய்தது தொடர்பாக விசாரித்த எஸ்.ஐ மதுபோதையில் வாகனம் ஓட்ட கூடாது என கூறி வாகனத்தின் ஆவணங்கள் வீட்டிலிருந்து காலை எடுத்து வரவும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனால் உடனடியாக வீட்டிற்குச் சென்ற முருகவேல் வீட்டு ஓனர் கைவசம் இருந்த மற்றொரு டாட்டா ஏசி வாகனத்தை எடுத்துக் கொண்டு நேரடியாக வந்து, அதே வேகத்தி்ல் தனது வாகனத்தை தர மாட்டேன் என்று சொன்ன காவலர் உதவி காவல் ஆய்வாளர் பாலுவை ஏற்றி கொலை செய்திருக்கிறார்.

இது முதல் கட்ட தகவலாக வெளி வந்துள்ளது. தற்போது முருகவேலை பிடிப்பதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |