நகை மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு பெண்ணை ஏமாற்றிய 2-வது கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 41 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கிராம நிர்வாக அலுவலராக இருக்கும் பெண்ணின் முதல் கணவர் கடந்த 2008-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதனை அடுத்து கணவரின் தம்பியான முரளிதரன் என்பவரை இந்த பெண்ணுக்கு 2-வதாக திருமணம் செய்து கொடுத்தனர் இந்நிலையில் முரளிதரன் தனது மனைவியிடம் தொழில் தொடங்கப் போவதாக கூறி 18 லட்ச ரூபாய் பணத்தையும், 40 பவுன் தங்க நகையையும் வாங்கிக் கொண்டார். இதனை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முரளிதரன் விஜயலட்சுமி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த அந்த பெண் தன்னிடம் வாங்கிய பணம் மற்றும் நகையை திருப்பித் தருமாறு கேட்டதற்கு முரளிதரனும், அவரது குடும்பத்தினரும் பெண்ணை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் முரளிதரன், விஜயலட்சுமி, முரளிதரனின் தந்தை ராமச்சந்திரன், தாய் வள்ளி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.