Categories
கல்வி தேசிய செய்திகள்

ஏப்-5 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

ஏப்ரல் 5 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்க மிசோரம் அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் வடகிழக்கு மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்க மிசோரம் அரசானது அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது. மேலும் இதுகுறித்து அரசு தெரிவித்துள்ளதாவது, வருகிற ஏப்ரல் 5 முதல் புதிய வழிகாட்டுதலின்படி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் மீண்டும் திறக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும், விடுதிகளிலும் கல்வித்துறை வகுத்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனைத் தொடர்ந்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கபடுவதாகவும், ஆனால் மற்ற செமஸ்டர் மாணவர்களுக்கு ஜூலை முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என கூறியுள்ளது.

இதையடுத்து மிசோரம் பல்கலைக்கழகத்தில் உள்ள தோட்டக்கலை, நறுமணம் மற்றும் மருத்துவ தாவரங்கள் துறையில் உள்ள பிஎச்டி அறிஞர்கள் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதி உண்டு. மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களும் இரு நேரங்களிலும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் நுழைய கட்டாய அனுமதிச் சீட்டு என்ற முறையையும் அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.

Categories

Tech |