Categories
தேசிய செய்திகள்

“ஏப்ரல் TO ஆகஸ்ட்” உற்பத்தி செலவு கூடியதால்…. உயரும் டீ தூள் விலை….!!

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ஊட்டி தேயிலை தூளின் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக ரேஷன் கடைகளில் விற்கப்படும் 100 கிராம் ஊட்டி தேயிலை தூள் விலை ரூபாய் 22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 1 வரை ஒரு கிலோ ஊட்டி தேயிலை தூளின் உற்பத்தி செலவு ரூபாய் 220 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சிறு தேயிலை கூட்டு நிறுவனம் , கூட்டுறவு துறைக்கு வழங்கிவந்த ஒரு கிலோ டீத்தூளின் விற்பனை விலையை ரூபாய் 190 லிருந்து ரூபாய் 220 ஆக மாற்றம் செய்துள்ளது. இதையடுத்து ரேஷன் கடைகளில் தேயிலை தூள் விலை ரூபாய் 19 இல் இருந்து ரூபாய் 22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

Categories

Tech |