ஏப்ரல் 7 முதல் 11 மாவட்டங்களில் கோடையில் அதிக வெப்பநிலையில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் அதிக அளவில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 11 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை அளவு இயல்பை விட 3 லிருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூரில் வெப்பநிலை அதிகரிக்கும். திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சியில் அனல் காற்று வீசக்கூடும். பொதுமக்கள் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.